பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றசாட்டுகளை சுமத்தி வருவதோடு அண்ணாமலை வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் தனியாக போட்டியிடுகிறேன் நீங்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று காயத்ரி வெளிப்படையாகவே அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார். ஆனால் பாஜகவினர் துபாய் ரூமில் திமுக கட்சியை சேர்ந்த ஒருவரை காயத்ரி சந்தித்து பேசியதாகவும் பாஜகவுக்கு எதிராக தற்போது கொடி தூக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் காயத்ரி ரகுராம் மீண்டும் அண்ணாமலையை விமர்சித்து ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார்.

அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் நான் சுயேட்சையாக நின்று உங்களை எதிர்த்து வெற்றி பெறுவேன். ஆனால் மிகப்பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று கூறும் நீங்கள் போட்டியிட தயாராக இல்லை. களத்தில் இருவருக்கும் பூத் கமிட்டி மற்றும் பூத் முகவர் இல்லை. உங்களுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். நான் சுயேச்சை. நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். இருப்பினும் உங்களை என்னால் வெல்ல முடியும். அதன் பிறகு ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறவிருந்த என்னுடைய யாத்திரையை தற்போது ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு மாற்றி வைத்து இருக்கிறேன். அண்ணாமலை யாத்திரை செல்லும் அதே நாளில் நானும் என்னுடைய யாத்திரையை தொடர்வேன். மேலும் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் நீதிக்காக போராடும் பெண் என்பதால் நான் எதை நினைத்தும் பயப்பட மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.