ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல், கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுதும் துவரை அறுவடை துவங்கியுள்ளதால், புதிய துவரம் பருப்பு வெளிச்சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த நிலையில் கனடா பருப்பை வாங்குவது ஏன்?. இதனால், அரசிற்கு, ரூ.60 கோடி இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், ரேஷனில் பருப்பு விலை உயரும் என கூறப்படுகிறது