தமிழ்நாடு அரசின் சார்பில், பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு நாளை தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கத், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் 50-க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40-க்கும் மேற்பட்ட அமர்வுகள் மற்றும் குழு விவாதங்களுடன் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.