ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்  மாவட்டத்தை சேர்ந்தவர் முஹமத் ஷதாப். 35 வயதான இவருக்கு போலந்து நாட்டை சேர்ந்த போலக் பார்பரா எனும் 45 வயது பெண்மணியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் போலந்து பெண்ணுக்கு திருமணம் முடிந்த ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். முஹமத் ஷதாப்  மீது கொண்ட காதலால் போலந்து பெண் போலக் பார்பரா தனது கணவரிடம் விவாகரத்து வாங்கியதோடு பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு விசா பெற்று இந்தியா வந்து சேர்ந்தார்.

அங்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சிறிய கிராமத்தில் முகமத் ஷதாப்புடன் சேர்ந்து வாழ துவங்கியுள்ளார். ஷதாப்பும் பார்பராவுக்காக குளிர்சாதன பெட்டிகளை வாங்கி வைத்ததோடு அவர் பார்ப்பதற்கு புதிய கலர் டிவியும் வாங்கி வைத்துள்ளார். அதேபோன்று பார்பராவும் காதலன் வீட்டு வேலைகளை செய்வது, தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகளை பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டை சேர்ந்த பெண் கிராமத்தில் இருந்து இது போன்ற வேலைகள் செய்வதை அறிந்த காவல்துறையினர் முஹமத் ஷதாப்  வீட்டிற்கு வந்து விசாரித்தது. அவருக்கு விசா பெற  பதிவு செய்துள்ளதாகவும் அதன் பிறகு தனது மகளுடன் முஹமத் ஷதாப்பையும் போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல இருப்பதாகவும் போலக் பார்பரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.