கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்வாகி சட்டம் 2006 இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சரித்துள்ளது.