தமிழ்நாடு முழுவதும் தினம்தோறும் ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள் மற்றும் காய்ச்சல் விபரங்களை சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து மண்டலங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.