செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் அறிவிப்பின்படி மக்களின் இடத்திற்கு நேரடியாக வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகளை சிரமைக்கும் பணிகளுக்கு 4000 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இரண்டு மாதங்களுக்குள் கண் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் ரேஷன் கடை பொருள்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக நியாய விலை கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக முழு நேர, பகுதி நேர நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.