தமிழகத்தில் பொதுவாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில் நடைபாண்டில் இந்த மாதங்களில் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள்  மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும். தரை கடல் காற்று இடைவெளி ஏற்படும்போது கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை சுமார் இரண்டு மணி நேரம் வரை பெய்ய வாய்ப்புள்ளது. மே மாதம் வெயிலை அக்னி நட்சத்திரம் என்று பஞ்சாங்கத்தில் பலரும் அழைப்பார்கள்.ஆனால் அவ்வாறு ஒன்று வானிலையில் கிடையாது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.