தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளனர். இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். நாளை கடைசி நாள் என்பதால் இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.