தமிழகத்தில் மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தனித்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.அதே சமயம் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சியை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. தற்போது வங்கிகளில் படிக்கு செல்பவர்களுக்கு உதவும் விதமாக வங்கி சார்ந்த பாடப்பிரிவுகள் 18 முதல் 20 வாரங்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இந்த பயிற்சிகள் முடிவடைந்த உடன் அரசு அங்கீகாரத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். அதே சமயம் வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

  • அதற்கு முதலில் https://www.tnfinskills.com/ என்ற இணையப்பக்கத்திற்கு சென்று  Skilling என்பதை தேர்வு செய்து ‘Banking’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
  • பிறகு Certificate Course in Banking & Finance என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் வரும் பக்கத்தில் கற்று தரப்படும் பாடப்பிரிவுகள் அதற்கான பயிற்சிகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அத்துடன் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தகுதிகள் நிபந்தனைகள் குறித்த விவரங்களும் தொகுதி வழங்கப்பட்டிருக்கும்.
  • அதனை  படித்து விட்டு உங்களுக்கான பாடப்பிரிவை தேர்தெடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.