தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடனாளியாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும்; அதற்கான வரவேற்பை பொறுத்து மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.