பொதுவாகவே தீபாவளி என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது பட்டாசுகள் தான். அடுத்து தான் இனிப்புகளும் பிற கொண்டாட்டங்களும் நினைவுக்கு வரும். ஆனால் தமிழகத்தில் சில கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசுகளை தங்கள் ஊர் பக்கம் நெருங்கக்கூட விடுவதில்லை என்பது ஆச்சரியமான செய்தியாகும்.

அதன்படி ராமநாதபுரம், தேர்த்தங்கல், மயிலாடுதுறை பெரம்பூர் கிராமம் மற்றும் வேடசந்தாங்கல் ஆகிய ஊர்களில் பறவைகளுக்காக அந்த ஊர் மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசுகள் வெடிப்பது கிடையாது. இந்தப் பறவைகள் தான் எங்கள் ஊருக்கு அழகை தருகின்றன என அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.