தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பொது மக்களின் தேவை அறிந்து பொருட்களை உற்பத்தி செய்வோம். ஆவின் பொருள்களின் தரத்தை உயர்த்தி மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும்.

ஆவினில் தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு மலிவானம் மற்றும் தரமான பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் ஆவின் பொருள்களின் தரத்தை உயர்த்துவது குறித்தும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.