சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது.  இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடை வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை. மேலும், இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.