ஜூலை 18 தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

1947 ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் பிரிக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் சில பகுதிகள் மைசூர், ஹைதராபாத், திருவிதாங்கூர் மாகாணங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் புதிதாக உருவாகின. மீதமுள்ள பகுதிகளை கொண்டு சென்னை மாகாணம் அதே பெயருடனையே அழைக்கப்பட்டது.

சென்னை மாகாணம் தனியாக பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1. 1957ஆம் வருடம் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொள்ள தொடங்கினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத நிலையில் உண்ணாவிரதம் தொடங்கிய 76 வது நாள் அவர் உயிரிழந்தார். இதன் பிறகு சென்னை மாகாணத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது.

1962 ஆம் வருடம் நாடாளுமன்றத்தில் பெயர் மற்ற தீர்மானம் கொண்டு வந்த போது நிராகரிக்கப்பட்டது. மீண்டும் 1964 இல் திமுக எம்எல்ஏ தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் கொண்டு வந்த போது அப்போதும் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு 1967ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. சட்டப் பேரவையில் தாக்கல் செய்த இந்த தீர்மானத்தை அனைத்து கட்சி ஆதரவுடன் ஏற்றுக்கொண்டு மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது  இந்த தினம் தான் தமிழ்நாடு நாளாக தற்போது கொண்டாடப்படுகிறது.