சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் இன்று அக்டோபர் 23 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் சேலம் மற்றும் திருப்பூர் இடையே வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் 23 திங்கட்கிழமை முதல் 10 நிமிடங்கள் முன்னதாக வந்தடையும்.

இந்த நிலையில் திருப்பதி மற்றும் பெங்களூரு அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டைக்கு வழக்கத்தை விட பத்து நிமிடம் தாமதமாகவும் திருப்பதி மற்றும் விழுப்புரம் விரிவுரையில் காட்பாடிக்கு வழக்கத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகவும் வந்து செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.