பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இச்சம்பவம் காண்பிக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

பாஜக எம்.பி மீது மல்யுத்த வீராங்கணைகள் பாலியல் புகார் கூறி பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செங்கோலை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.