இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போரானதுநாளுக்கு  நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தைத்து அனுப்ப முடியாது என கேரளாவைச் சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் இந்நிறுவனம் ரத்து செய்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழில்பேட்டையில் இயங்கி வரும் மரியன் அப்பாரல்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டு ராணுவ சீருடைகளைத் தைத்து அனுப்பி வருகிறது.