உலக அளவில் செல்போன் முதல் நெட்வொர்க் சாதனங்கள் வரை மிகவும் பிரபலமான நிறுவனம் என்றால் அது நோக்கியா தான். ஒரு காலத்தில் நோக்கியா என்றாலே அட்டகாசமான செல்போன் நிறுவனமாக பார்க்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக விற்பனையான மொபைல் ஃபோன்களில் பாதி நோக்கியா நிறுவனத்தினுடையது. 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அந்நிறுவனத்தின் விற்பனை சரிவை சந்தித்தது. ஆனாலும் கூட புது புது மாடல்களை அறிமுகம் செய்து உலக சந்தையில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நோக்கியா நிறுவனத்தின் விற்பனையானது 19 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் லாபமும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக 14 ஆயிரம் ஊழியர்களை நோக்கியா நிறுவனம் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அந்நிறுவனத்தில் 86,000 ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.