பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா, கூகுள் பயனர்களின் தரவுகளைப் பணமாக்குவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.