ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் திருமணம் செய்து கொண்டால் வீரம் குறைந்து விடும் என்று அந்த நாட்டில் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பாதிரியாரான வாலண்டைன், திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆண்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் இவர் கிபி 270 இல் பிப்ரவரி 14-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய நினைவு நாளே காதலர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்போதிலிருந்து பிப்ரவரி 14-ஆம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர்.