தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குடிசைவால் மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது தான். இதனை அடுத்த ஆறு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பீடு படி ஒவ்வொரு வீட்டுக்கும் 3.50 லட்சம் ஒதுக்கப்படும். அதனை விட கூடுதலாக பணம் செலவு செய்ய விரும்பினால் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெறலாம்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சியின் முகமையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் கூட்டுறவு துறை மூலம் கடன் பெற முடியும். வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணை மற்றும் ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தான் இந்த கடனுக்கான மூல ஆதாரங்களாகும். இதில் 9.50 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் கடனை திரும்ப செலுத்தினால் போதும்.