பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அல்லது பிபிஎஃப் (Public Provident Fund – PPF) என்பது அரசு ஆதரவு பெற்றுள்ள நீண்ட கால ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இது ரிட்டயர்மென்ட்கான சேமிப்பாக அமைவதோடு, ஒரு சில வரிச் சலுகைகளையும் தருகிறது. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) என்பது தபால் நிலையத்தில் இருக்கும் நீண்டகால சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த சேமிப்பு திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. ஒரு நபர் தனது PPF அக்கவுண்டில் ஒவ்வொரு வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்கிறார். முதலீடு செய்த 25 வருடங்களுக்குப் பிறகு அந்த நபரின் PPF மெச்சூரிட்டி தொகை ரூ.1.03 கோடியாக இருக்கும். இந்த தொகைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை.