நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி துக்காராம் பாகோஜி கயாகர் என்பவர் அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென்று தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததால் அவர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 13,000 பெட்டிகள் தக்காளி அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். அவர் ஒவ்வொரு பெட்டியையும் சுமார் 1000 ரூபாய் முதல் 2400 வரை விற்பனை செய்துள்ளார். இதன் மூலமாக அவருக்கு 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் தக்காளி விற்பனை செய்து கோடீஸ்வரர் ஆன விவசாயியின் இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.