உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் 74.5 லட்சம் வாட்ஸாப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய ஐடி விதிகளை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியா முழுக்க 74,52,250 வாட்ஸாப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அதே நேரம் 4,377 புகார்கள் பெறப்பட்டுள்ளது, அதில் 234 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஐடி விதிகளை மீறியதற்காக ஏறக்குறைய அனைத்து புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.