கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்பி மணீஷ் திவாரி 8 இந்தியர்களுக்கு எதற்காக தூக்கு தண்டனை என்று இதுவரை தெளிவாக தெரியாது என்றும் அந்த 8 பேருக்கும் ஏதாவது நடந்தால் அவர்களது ரத்தம்  பாஜக அரசின் கைகளில் படிந்த கறையாகும் என்றும் கூறியுள்ளார்.