பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. காதலையும் அதன் ஊடாக நடக்கும் சாதி ஊழியங்களையும் அந்த படத்தில் கூறியிருந்தார் மாரி செல்வராஜ். அதன் பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்தார். கொடியங்குளம் என்னும் ஊரில் எளிய மக்கள் மீது அதிகார வர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து அந்த படம் உருவாகி இருந்தது. இதுவும் ஹிட்டடித்தது. ஆனாலும் பரியேறும் பெருமாள் இருந்த அடர்த்தி இந்த படத்தில் இல்லை என்று விமர்சனத்தை சந்தித்தது.

இருப்பினும் இந்த இரண்டு படங்களில் மாரி செல்வராஜ் முன்னணி இயக்குனராக மாறிவிட்டார். தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். இந்த படமும் மெகா ஹிட் ஆகி உச்சத்துக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் என்னை பைத்தியக்காரன், முட்டாள் என திட்டுவார்கள் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “சின்ன சின்ன பேப்பரை கூட படிக்காமல் விடமாட்டேன். புத்தகம் படிக்கும் போது என்னை பைத்தியக்காரன், முட்டாள் என திட்டுவார்கள். ஆனால், நான் படித்த புத்தகங்கள் தான் இந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது. நாம் சக மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டும். அவர்களோடு பேச வேண்டும்” என்றார்