இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 7-வது நாளாக உச்சக்கட்ட போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், காஸாவில் வாழும் மன்சூர் சௌமன், அல் ஜஸீரா செய்தி நிறுவனத்திற்கான பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதில், “நாங்கள் நம்பிக்கையற்று போய்விட்டோம். காஸாவைப் பற்றியும் இங்கிருக்கும் மக்களைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை.

நாங்கள் இறக்கப்போகிறோம் என்பது முடிவாகிவிட்டதால், வீட்டிலேயே இறந்துகொள்கிறோம். வடக்கோ தெற்கோ எங்கு சென்றாலும் கொல்லப்படத்தானே போகிறோம். எங்கள் உரிமைக்காக போராடியபடி, நெஞ்சை உயர்த்தி, எங்கள் நம்பிக்கையுடன் எங்கள் மண்ணிலேயே இறந்துவிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.