ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியான செர்கேய் சாய்ஹு வடகொரியா சென்று அதிபர்  கிம் ஜாங் உன்னை சந்தித்ததோடு அதிபர் புதிர் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கியுள்ளார். கடிதத்தை பெற்றுக்கொண்ட கிம் ராணுவ குழுவை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் 70 வது வெற்றி தினம் இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ள சீன வீரர்கள் ரஷ்ய வீரர்கள் வடகொரியா சென்றுள்ளனர். அதிபர் சந்திப்பை முடித்த பின் ரஷ்ய மந்திரி செர்கேய் வடகொரியா ராணுவ மந்திரியை சந்தித்து உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம் என பாராட்டியுள்ளார்.