இஸ்ரேலின் மீது கடந்த ஏழாம் தேதி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்களுக்கும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய ஆயுதங்கள் வடகொரியாவிற்கு சொந்தமானது என்று தென்கொரியா கூறியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வடகொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது.