கர்நாடகாவின் யரகனஹள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்தனர். வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள் குமாரசாமி (45), அவருடைய மனைவி மஞ்சுளா (39), அவரது குழந்தைகள் அர்ச்சனா (19), சுவாதி (17) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவுகளில் தூங்குவதற்கு முன்பு கேஸ் சிலிண்டர்களை மூடி விட்டு தூங்குவது நல்லது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.