தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை தமிழக முழுவதுமாக 16 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள். அவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த பத்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மறுபுறம் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 இல் தொடங்கி இருபதாம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை சுமார் 9.2 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முழுவதும் 80க்கும் ஏற்பட்ட விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.