நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பல முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக வெளியாகி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி ஒன்று தற்போது நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது விவசாயிகளுக்கு மின் கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குழாய் கிணறுகளை பயன்படுத்தி விவசாயிகள் ஒரு ரூபாய் கூட இனி மின்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த அறிவிப்பால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பில் எதுவும் செலுத்தாமல் இருந்தாலும் முந்தைய பில்களுக்கு வட்டி இல்லாமல் பணம் மட்டும் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்ட மூலம் மொத்தம் 1.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். கிராமம் மற்றும் நகத்துரங்களை சேர்த்து இரண்டு வகையிலும் மொத்தம் 1478000 குழாய் கிணறுகளின் மின்கட்டணம் 100% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.