தமிழக அரசானது துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் சார்பாக மீட்டர்கள் பயன்படுத்தப்பட்டு கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் மீட்டர்களுக்கு வைப்பு தொகையாக வீடுகளுக்கு தரைக்கு அடியில் மின்சாரம் வழங்கும் இடங்களில் ஒரு முனை இணைப்புக்கு, 765 ரூபாய்; மும்முனைக்கு, 2,045 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் மீட்டருக்கு பற்றாக்குறை நிலவி இருக்கிறது.

எனவே தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்களை நுகர்வோர்களே வாங்கி வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புக்கு விண்ணப்பிப்போர் தாங்களே  தனியாரிடம்  மீட்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஒரு முனை மீட்டர் விலை, 970 ரூபாய்; மும்முனை மீட்டர், 2,610 ரூபாய்;மீட்டரை வாங்கியதும், மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும். அதை சோதித்து பின்னர் மீட்டர் பொருத்தப்படும். அந்த நுகர்வோரிடம் மீட்டர் வைப்பு தொகை வசூல் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.