தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  நாள்தோறும் ரயில் சேவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ரயில் போக்குவரத்து மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மின்சாரத்தில் இயங்கும் மெ மு ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மெமு என்பது மின்சாரத்தை பயன்படுத்தி குறுகிய மற்றும் நடுத்தர தொலைவிற்கு இயக்கப்படக்கூடிய ரயில். தமிழகத்தில் டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் ஆறு டெமு ரயில்களையும் இரண்டு விரைவு ரயில் அக்டோபர் 31ஆம் தேதியோடு நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.