பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் அடுத்த மூன்று மாசத்துக்கு தேவையான மின்சாரத்துக்கு டெண்டர் கோரப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் ட்டுள்ளன எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மின்சாரம் தொடர்பாக ட்விட்டரில் பயனர்கள் அளிக்கும் புகார் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ட்விட்டரில் குமரேசன் என்பவர், தனது கிராமத்தில் இரவு நேரத்தில் சரியாக மின்சாரம் கிடைக்க வில்லை என புகார் அளித்திருந்தார். அடுத்த 2 நாளில் அமைச்சர் இதற்கு பதிலளித்துள்ளார். அதில், ‘தங்கள் குறைபாடு சீர் செய்யப்பட்டது. புகார்கள் இருந்தால் அனைவரும் கூறும்படியும்’ கோரியுள்ளார்.