இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஆதார் கார்டில் முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்ய டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மை ஆதார் என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஒருவேளை நேரடியாக ஆதார் சேவை மையங்களுக்கு சென்று ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் செய்ய விரும்பினால் 25 ரூபாய் கட்டணமாக செலுத்தி அப்டேட் செய்யலாம். இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய,

முதலில் my aadhar என்ற போர்ட்டலில் உள்ள பக்கத்தை தேர்வு செய்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுத்து உங்களது மொபைல் எண்ணுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு என்பதை கிளிக் செய்து தேவையான மாற்றத்தை செய்யலாம். பின்னர் URN எண் பயன்படுத்தி ஆதார் அப்டேட்டின் நிலையை அறிந்து கொள்ளலாம்.