தொழில்நுட்பம் வளர வளர நாளுக்கு நாள் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தை வழங்கும் படியாக ஐபோன் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. பல நாடுகள் சீன நாட்டின் டிக் டாக் செயலியை தடை செய்ததன் எதிரொலியாக சீன அரசாங்கம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் பலரும் ஐபோனை விரும்பி பயன்படுத்தி வரும் நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் மீதான மோகத்தை குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது .

அந்த வகையில் ஐபோன் மற்றும் வெளிநாட்டு முத்திரை உள்ள எந்த ஒரு கருவிகளையும் சீன அரசு ஊழியர்கள் பணியின் பொழுது பயன்படுத்தக்கூடாது என்று புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது . மேலும் இந்த உத்தரவு குறித்து சீன அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க விரும்பவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.