இந்தியாவில் அனைத்து வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கியில் அதனுடைய அபராத முறையை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அபராத தொகையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இது ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் அளவு மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றத்தின் எண்ணிக்கை போன்றவற்றுக்கு ஏற்ப இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய நடவடிக்கையானது அரசு நடத்தும் வங்கிகளை அதிகமாக தாக்குலாம் எனவும் கூறப்படுகிறது. நெறிமுறை படுத்தப்பட்ட நிறுவனங்களுக்குள் கார்ப்பரேட் நிர்வாக தரத்தை மேம்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் பெரிய வங்கிகள் திட்டமிட்டு வரவும் நிலையில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.