திரையுலகில் கதாநாயகர்கள் மட்டுமே பல வருடங்கள் நீடித்து நிலைக்க முடியும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் அவர். தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்துள்ள போதிலும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் த்ரிஷா தான்.

இவர் சினிமா மூலம் மட்டுமின்றி விளம்பர படங்கள், கடை திறப்பு விழா போன்றவை மூலமும் வருமானம் ஈட்டுகிறார். இன்று தனது இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சென்னையில் ரூ. 7 கோடி மதிப்பிலும், ஹைதராபாத்தில் ரூ. 6 கோடி மதிப்பிலும் த்ரிஷாவுக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளது.