உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார்.

இப்படி அடுத்தடுத்து ஷாக் கொடுத்து வரும் டிவிட்டர் நிறுவனம் அடுத்ததாக தற்போது X என்று மாறி இருக்கும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘டார்க் மோட்’ வசதி வழங்கப்பட இருக்கிறது. இதில் புதிய மாற்றம் என்னவெனில், டார்க் மோடில் இருந்து தளத்தை டீஃபால்ட் மோடில் இயக்குவதற்கான வசதி வழங்கப்படாது என ட்விட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கினார். அவரது தலைமையில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஓபன் ஏஐ, ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளது.