தமிழகம் முழுவதும் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் 7,55,451 மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக நந்தினி என்ற மாணவி பொது தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவி 600 மதிப்பெண் எடுத்தாலும் நீட் இவருடைய கனவை பாழாக்கிவிடும் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடையாது. ஏனெனில் அந்த மாணவி வணிகவியல் குரூப் எடுத்துப் படித்துள்ளார். மேலும் நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால் அதற்கு அறிவியல் அல்லது கணிதம் படித்திருக்க வேண்டும். தற்போது 600 மதிப்பெண் எடுத்த மாணவி வணிகவியல் எடுத்து படித்துள்ளதால் அவரால் நீட் தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.