கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது‌ அணை கட்டுவது உறுதி என்றும், இதற்காக ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறியிருப்பது தமிழக மக்களிடத்திலும், விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு வருடம் தோறும் 177,25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அளிக்காத நிலையில் தற்போது மேகதாது அணை கட்டினால் 67 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தேக்கி வைத்துக் கொள்ளும். ஏற்கனவே காவிரியின் உபநீர் மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வரும் நிலையில் அணை கட்டினால் அதுவும் கிடைக்காமல் போய்விடும். கர்நாடகாவின் இந்த நிலைப்பாடு காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை பறித்துக் கொள்வது போன்றதாகும். இதனால் வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும். மேலும் மேகதாது அணைத்திட்டத்தை கர்நாடக அரசு கைவிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.