மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே பொருளாதார உலகில் இருந்து நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கை ஒளிக்கீற்றையும் அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பட்ஜெட் மீது சாமானிய மக்கள் முதல் தொழில் துறையினர் என பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் யூனியன் பட்ஜெட் என்ற செயலியில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.