ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  லக்னோ புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது..

ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. லக்னோவில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் த்ரிப்பாதி 34 ரன்களும், அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களும் எடுத்தனர்.

மேலும் அப்துல் சமாஜ் 21* ரன்களும், வாஷிங்க்டன் சுந்தர் 16 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், யஷ் தாகூர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் துவக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இதில் மேயர்ஸ் 13 ரன்களில் அவுட் ஆக, பின் வந்த தீபக் ஹூடாவும் 7 ரன்களில்  அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த க்ருனால் பாண்டியாவும், கே எல் ராகுலும் ஜோடி சேர்ந்து சிறப்பாக  ஆடினர். அதன்பின்  க்ருனால் பாண்டியா 34(23) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்..

அதைத்தொடர்ந்து கேஎல் ராகுல் 35(31) ரன்கள் எடுத்த நிலையில் ஆடில் ரஷீத்தின் 15வது ஓவரில்  முதல் பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் அதே ஓவரின் 2வது பந்தில் டக் அவுட் ஆனார்.. பின் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (10 ரன்கள்) மற்றும் நிக்கோலஸ் பூரான் (11 ரன்கள்)  இருவரும் அவுட் ஆகாமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.  லக்னோ அணி 16 ஓவரில் 5 விக்கெட் இழந்து  127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஆடில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு (3 போட்டிகளில் 2 வெற்றி) முன்னேறியுள்ளது. அதே சமயம் 2 தோல்விகளுடன் ஹைதராபாத் அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது..