உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 170 பில்லியன் டாலர் ஆகும். பரம்பரையாக சொத்து எதுவும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் பெரிய பணக்காரராக உயர்ந்த ஒருவராக எலான் மஸ்க் அறியப்படுகிறார். இந்நிலையில் மஸ்க் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தந்தைக்கு சொந்தமாக எமரால்டு சுரங்கம் இருந்தது என்றும் குடும்ப பணத்தில் தான் மஸ்க் இந்த அளவுக்கு முன்னேறினார் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

ஆனால் இதற்கு மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனக்கு குடும்ப சொத்து எதுவும் இல்லை‌. கீழ்த்தட்டு நடுத்தர வருமான நிலையிலிருந்து தான் மேல் தட்டு நடுத்தர வருமான நிலைக்கு மாறும் குடும்பமாக உயர்ந்தோம். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக எந்த சுரந்கமும் கிடையாது. எனக்கு பரம்பரை சொத்தும் கிடையாது. நான் யாரிடமிருந்து எந்த ஒரு பரிசையும் பெற்றதும் இல்லை. கடினமாக உழைத்து தான் இந்த நிலைக்கு முன்னேறி உள்ளோம் என்று கூறியுள்ளார்.