இந்திய அஞ்சல் துறையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்தால், 30 வருடங்களில் முதலீடு 45 லட்சம் ஆக இருக்கும். அதன் பிறகு முதிர்வு காலத்தின்  போது உங்களுக்கு சுமார்‌ 1.9 கோடி ரூபாய் வட்டியுடன் சேர்த்து ரூ. 1,54,50,911 வரை கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் முதலீடு செய்தால் அதே மாதத்தில் அதற்கான வட்டி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் 6-ம் தேதிக்கு பிறகு முதலீடு செய்தால் அந்த மாதத்திற்கான வட்டி அடுத்த மாதத்தில் தான் கிடைக்கும். இந்நிலையில் உங்களுடைய கணக்கில் 10 லட்ச ரூபாய் இருந்தால் ஏப்ரல் மாதத்திற்குள் நீங்கள் 50,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களுக்கு ஒரு மாதத்தில் 6,212 ரூபாய் வட்டி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு முதலீடு செய்தால் மாதாந்திர வட்டியாக ரூ. 5,917 மட்டுமே கிடைக்கும். எனவே புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு ஏப்ரல் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பொது வருங்கால வைப்பு நிதியில் அதிக வட்டியை பெற்று பயன்பெறுங்கள்.