பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என வணிகவரி பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். ரசீது ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 20ல் இருந்து 200 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என வணிகவரி பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.செட்டில்மென்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச கட்டணம் 4000 ரூபாயில் இருந்து 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
அதிகபட்ச முத்திரை தீர்வை ரூபாய் 25,000 இருந்து ரூபாய் 40,000 ஆகவும், தனிமனை பதிவுக்கான கட்டணம் ரூபாய் 200 ல் இருந்து ரூ 1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் இல்லாத பொது அதிகார ஆவண பதிவு கட்டணம் ரூபாய் 10,000 என்பது சொத்தின் சந்தை மதிப்பிற்கு 1 சதவீதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.. மாற்றி அமைக்கப்பட்ட புதிய கட்டணங்கள் வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆவணப்பதிவு, பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் சேவைகளை பொறுத்து கட்டண வீதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.