பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து முகநூலில் பதிவிட்டிருந்தார் எஸ்.வி சேகர். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ் வி சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஜி. ஜெயவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். தண்டனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்வி சேகர் தரப்பு மனு தாக்கல் செய்ததால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.