மார்ச் 1ஆம் தேதி முதல் ஏராளமான புதிய மாற்றங்கள் வர உள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6.50 சதவீதம் அதிகரித்துள்ளதால் மார்ச் 1 முதல் பல வங்கிகள் இதனை அமல்படுத்த உள்ளது. இதனால் இஎம்ஐ அதிகரிக்கும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை இந்த முறை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் நேரம் மாற்றப்பட உள்ளன. சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.

அதாவது சமூக வலைத்தளங்களான ட்விட்டர்,பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை இந்திய விதிகளுக்கு இனிமேல் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மத உணர்வுகளை தூண்டும் பதிவுகளுக்கு கட்டுப்பாடு இருக்கும் என்று தெரிகிறது. மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. ஹோலி மற்றும் நவராத்திரி வார விடுமுறை நாட்கள் சேர்த்து 12 நாட்கள் வருவதால் அதற்கு ஏற்றது போல மக்கள் தங்கள் வங்கி சார்ந்த வேலைகளை திட்டமிட்டு முன்னரே முடித்துக் கொள்வது நல்லது.